Sunday, February 13, 2011

எனது காதலிக்கு....

தினந்தோறும்
சுடிதார் அணிந்து வரும்
நீ அன்று
டீ சர்ட் ஜின்ஸில்
தோழிகளுடன்
பேசிக்கொண்டிருந்தபோது
என்னை பார்த்தும்
தலை குனிந்து
வெட்கபட்டாயே
ஞாபகமிருக்கிறதா..........

எனது காதலிக்கு....

எங்கள்
இடத்திற்கு வந்து
என்
அண்ணை பார்த்து
இது யார் என்று கேட்க
என் தம்பி
என்று அவன் கூற
என்னை அப்போது தான்
பார்ப்பது போல்
அப்பாவியாக பார்த்து சிரித்தாயே
ஞாபகமிருக்கிறதா.........

எனது காதலிக்கு....

நீ
உன் தோழிகளிடம்
ஆங்கிலத்தில்
பேசிக்கொண்டிருந்தபோது
என்னை பார்த்ததும்
தமிழில்
பேச ஆரம்பித்தாயே
ஞாபகமிருக்கிறதா.....

எனது காதலிக்கு....

உனக்கு பிடித்த
டென்னிஸ் பற்றியும்
எனக்கு பிடித்த
கிரிக்கெட் பற்றியும்
உனக்கு பிடித்த
விஜய் திரிஷா பற்றியும்
எனக்கு பிடித்த
சூர்யா ஜோதிகா பற்றியும்
வெகுநேரம் பேசுவோமே
ஞாபகமிருக்கிறதா..

எனது காதலிக்கு....

கடற்கரை மணலில்
கடலலை ஓரத்தில்
பொரித்த மீன்களை
ஆளுக்கு பாதியாக
சாப்பிட்டோமே
ஞாபகமிருக்கிறதா...

எனது காதலிக்கு....

உன் வீட்டிலிருந்து
பால் பாயாசம்
கொண்டு வந்தாயே
அதை நான்
சாப்பிட்டு விட்டு
உன்னை
ஆஹா  ஒஹோ
என பாராட்ட
அனைத்தும் கேட்டுவிட்டு
அதை செய்தது
என் அக்கா என்றாயே
ஞாபகமிருக்கிறதா....

தாஜ்மகால்

தாஜ்மகால்
காதலின் சின்னம்
யார் சொன்னது...?
தன் மனைவியின்
பிரசவ கஷ்டத்தை
நேரில் காணும்
எந்த கணவணும்
அடுத்த குழந்தைக்கு
தயராக மாட்டான்
ஆனால்
பாவம் மும்தாஜ்
அவளுக்கு 14 குழந்தைகளாம்
உண்மையில் தாஜ்மகால்
காதலின் சின்னம் அல்ல
ஒரு காதலின் சமாதி...

நீ எனக்கு வேண்டாமடி...

சைனாவுக்கு
போக வேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும்
என் தந்தை...
பக்கத்து தெருவுக்கு கூட
என்னை பைக்கிலே
போகச் சொல்கிறார்
அவரை விட்டு விட்டா
உன்னோடு ஒடி வருவது..........

தேர்வு சமயங்களில்
இரவெல்லாம்
படித்து கொண்டிருப்பதோ நான்
விழித்து கொண்டிருப்பதோ
என் தாய்...
அவளை விட்டு விட்டா
உன்னோடு ஒடி வருவது....

ஆபிசுக்கு செல்லும்
அண்ணனின்
அயர்ன் செய்த சட்டையை
நான் அணிந்து கொண்டாலும்
கோபப்படாமல்
ஆனந்த படுவானே
அவனை விட்டு விட்டா
உன்னோடு ஒடி வருவது.......

நான்
பாக்கெட்மணி
கேட்கும்பொதல்லாம்
தான் நகை
வாங்க வைத்திருக்கும்
பணத்தை
புன்னகையோடு தருவாளே
என் தங்கை..
அவளை விட்டு விட்டா
உன்னோடு ஒடி வருவது...............

கோபத்தில்
தம்பியை அடித்துவிட
அது அப்பா வரும்
நேரம் என்பதால்
என்னை
காட்டிக்
கொடுக்காமல்
அழுகையை அடக்கிகொள்வானே
அவனை விட்டு விட்டா
உன்னோடு ஓடிவருவது.........

இப்படி எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவைக்கும்
நீ எனக்கு
    வேண்டாமடி...!

Wednesday, February 2, 2011

நட்பு

நாட்கள் நம்மை
கடந்து சென்றாலும்,
நட்பின் நினைவுகள்
நம்மை விட்டு
பிரிந்து செல்வதில்லை...

நட்பு

நிழல் கூட
வெளிச்சம் உள்ளவரைதான்
துணைக்கு வரும்...
ஆனால்,
என்னுடைய அன்பு
உயிர் உள்ளவரை
துணையாய் வரும்....
உன்னோடு....

வியர்வை

தாமரையில்
தண்ணீர்த் துளிகள்
ஒட்டவே ஒட்டாது
என்பதுதானே
இயற்கையின் நியதி..!
பிறகெப்படி
உன் முகத்தில் மட்டும்
வியர்வைத் துளிகள்..!

அழகான கவிதை

உலகிலேயே மிகவும்
அழகான கவிதை
ஒன்று சொல்
என்றார்கள்..!
நான்
உன் பெயரை மட்டும்தான்
சொன்னேன்..!
அதற்கே அசந்து விட்டார்கள்..!

சிற்பி

இந்த உலகின்
மிகச்சிறந்த
சிற்பிகள் யார்..?
என்று போட்டி வைத்தால்
முதல் பரிசு
உன்னுடைய
பெற்றோர்களுக்குத்தான்
பெண்ணே..!

Tuesday, February 1, 2011

நட்பு

போகிற இடத்தில்
என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஓருவன்
இருந்துவிடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை.

நட்பு

கண்களை
வாங்கிக்கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்.
கண்களை
வாங்கிக்கொண்டு
உன்னைப் போல்
கண்களைத்
தருகிறவள்தான்
தோழியாகிறாள்.

நட்பு

நீ
என்னிடம்
பேசியதைவிட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்...
நமக்கான
நட்பை!.

நட்பு

காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல் அவ்வளவு
எளிதன்று...

நட்பு

எல்லாவற்றிலும்
எனக்குப்
பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்!
உனக்குப்
பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு
நம்மைத்
தேர்ந்தெடுத்திருக்கிறது.