சைனாவுக்கு
போக வேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும்
என் தந்தை...
பக்கத்து தெருவுக்கு கூட
என்னை பைக்கிலே
போகச் சொல்கிறார்
அவரை விட்டு விட்டா
உன்னோடு ஒடி வருவது..........
தேர்வு சமயங்களில்
இரவெல்லாம்
படித்து கொண்டிருப்பதோ நான்
விழித்து கொண்டிருப்பதோ
என் தாய்...
அவளை விட்டு விட்டா
உன்னோடு ஒடி வருவது....
ஆபிசுக்கு செல்லும்
அண்ணனின்
அயர்ன் செய்த சட்டையை
நான் அணிந்து கொண்டாலும்
கோபப்படாமல்
ஆனந்த படுவானே
அவனை விட்டு விட்டா
உன்னோடு ஒடி வருவது.......
நான்
பாக்கெட்மணி
கேட்கும்பொதல்லாம்
தான் நகை
வாங்க வைத்திருக்கும்
பணத்தை
புன்னகையோடு தருவாளே
என் தங்கை..
அவளை விட்டு விட்டா
உன்னோடு ஒடி வருவது...............
கோபத்தில்
தம்பியை அடித்துவிட
அது அப்பா வரும்
நேரம் என்பதால்
என்னை
காட்டிக்
கொடுக்காமல்
அழுகையை அடக்கிகொள்வானே
அவனை விட்டு விட்டா
உன்னோடு ஓடிவருவது.........
இப்படி எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவைக்கும்
நீ எனக்கு
வேண்டாமடி...!