Tuesday, April 19, 2011

காதல்...




சுத்த சைவம் நான்..!
நினைவில் கூட
அசைவத்தை
நினைத்துப் பார்த்தில்லை
உன் செவ்விழ்களைக்
கண்டதிலிருந்து
அசைவம்
சாப்பிடத் தோன்றுகிறது
எனக்கு..!


அப்பாவின் வலி

பிரசவ அறைக்குள்
அம்மா படும்
அவ்வளவு வலிக்கும்
நிகராகவே உள்ளது
வெளியில்
எதிர்பார்ப்பு
ஏற்படுத்தும்
அப்பாவின் வலி

அம்மாவின் வலி
சப்தங்களால் அழுத்தமாய்
பதிவு செய்யப்டுகிறது
அப்பாவின் வலியோ
மவுனத்துக்குள் புதைந்து
அமிழ்கிறது

அம்மாவுக்காக
வருத்தப்பட
ஏராளமானோர் உள்ளனர்
அப்பாவுடன்

அப்பாவின் வலிக்காக
வருந்திடத்தான்
அப்பாகூட இல்லை
அப்பாவுடன்